மதிராஜனின் கவிதைகள்

Tuesday, August 02, 2011



♥♥♥
உன்னையே
நீ
நேசிக்கும் கலையை நன்கு கற்று தேர்ந்த
பின்னர்
தான்
உன்னால் பிறரை
உண்மையிலே நேசிக்க முடியும்.உமது இதயத்தை
திறந்த
பின்னர் தான் உன்னால்
பிறரது இதயங்களை தொட முடி
யும் .
♥♥♥

Labels:


♥♥♥வாழ்க்கை என்பது எனக்கு சிறிய மெழுகுவர்த்தியல்ல .இப்போதைய பொழுதில் நான் பிடித்துள்ள ஒரு
அற்புதமா
தீபந்தம் போன்றதாகும் .அது எதிர்கால சந்ததியினரிடம் அதை கை
அளிபதற்கு
முன்னர்
.அதை எதுன்னை பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ
அத்துன்னை
பிரகாசமாக
எரிய
செய்ய நான் விரும்புகிறேன்

♥♥♥

எல்லாம் அறிந்த அறிவாளியும் அல்ல. ஏதும் தெரியாத முட்டாளும் அல்ல.

உன்னால் தீபம் எரிகிறது எனில் நீ தீக்குச்சியாய் இருப்பதில் பெருமைபடு.

இன்பமும், துன்பமும் பிறர் தர வர.....

வீழ்ச்சியை விரும்புகிறேன் எழுச்சிபெற...

பலமுறை வீழ்ச்சியுர்றேன் வீழ்ச்சியின் காரணம் அறியும்முன்பு

இப்பொழுது பலமுறை என்னிடம் வீழ்ச்சியுருகிறது வீழ்ச்சி......

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் !
என் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும் !!....

எங்களுக்கென நதி இருந்தது ....யாராலும் பெயர் சூட்டப்படாத
பறவைகள் எங்களின் வனம் முழுதும் குதுகளித்து கிடந்தன,.
பூமியின் பாரிய பரப்புகளை அதிர்வித்து மகிழ
காட்டாறுகள் எங்கள் வசமிருந்தன..அவ்வபோது எம்
குழந்தைகளை மகிழ்விக்க எங்களின் மூத்தி நீலி இருந்தாள்..
மற்ற உயிரினங்களை போல உணவு சேகரிக்க
வயல் வெளிகளை படைத்திருந்தோம் ..
எங்களின் காதலை முன் மொழிய ஆவாரம் பூக்களை
எம் பெண்களுக்கு சூட்டி மகிழ்ந்த நினைவுகள்
இப்பொழுதும் மிச்சமிருக்கின்றன..இப்பொழுது
நினைவுகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன...
வேட்டையாடிய ..உழைத்து சேகரித்த உணவை
ஒன்றாய் சமமாய் முதலில் குழந்தைகளுக்கும்
ஊனமுற்றவருக்கும் முதியவர்களுக்கும் கொடுத்து
பின் நாங்கள் பசியாறிய பொழுதுகளை
ஆரிய படையெடுப்பில் பலிகொடுத்தோம் சாதியாக
எங்களை நாங்களே பிரித்து கொள்ள பணிக்க பட்டோம் ..
முதலில் இங்கிருந்தே நாங்கள் வேறானோம் ..
நிலம் ..பின் வனம்.... பின் எங்களை மனிதர்களாய்
பழக்கப்படுத்திய எங்களின் மொழி ..எங்களின் பாடல்
..எல்லாம் வருபவனிடம் கொடுத்து கொடுத்து கட்டுண்டோம் ..
எல்லாம் முடிந்ததது ...எமக்காக
கரும் புலியாக காட்ச்சியளித்த தலைவனும் இல்லை .

KHADAL KAVITHAI

PENNE,
NE ANDREY SONNAI ENNAKKU THERINDHADHU
ELLAM UNNAKU THERIYATHU ENDRU..........
PIRAGUTHAN THERINDHADU UNNAKU
EAMATRA THERUYUM ENDRU.........

Thursday, December 09, 2010


சிறு குறிப்பு எழுதச் சொன்னால் ஒரு வரலாறு எழுதுபவன்உன் வரலாறு எழுத எண்ணம்என்ன செய்யப் போகிறேனோ ?...உன்னைப் பற்றி உனக்கேஓர் அறிமுகமாம்..(க்.கும்)பெண்ணை நிலவுடன் வர்ணித்துபல இடங்களில் கேட்டதுண்டு..பெண்ணே நிலவாக..நிலவே பெண்ணாக..இல்லை... நிலாப் பெண்ணாக‌சுயம்புவானவள் என்னளவில் நீ மட்டும் தான்...அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந்தாழ் ... அடைபட்டஅடிபட்ட மனங்களில் நீஅளிக்கின்றாய் அன்பைஓர் அன்னையாக...விருப்பம் போல அமைவதில்லைஎல்லோர்க்கும் அவர் வாழ்க்கைபிறர் விருப்பம் போல வாழுகின்றாய்நீயும்... அது யாராகினும் வலிகள்தான் உன் வழிகளெங்கிலும்முயன்று முயன்றுப் பார்க்கின்றாய்மனமின்மையால் தோற்க்கின்றாய்..அழைக்கின்றேன் எனதன்பு இயற்கையை அடுத்து வரும்தருணங்களில் உனக்கான வாழ்க்கையைஉன்னிடமே கொடுப்பதற்க்காக..

Labels:


கேட்டு விட்டு சிரிக்கின்றாய் நீசிறு சிறு குறிப்புகளாக....என்னவென்று புரியாமல்மலர்வது காதல்...இது இன்னதென்று புரிவதால்மலர்வது நட்பு....அப்படியோர் நன்னாளில் மலர்ந்ததுதான் நம் நட்பும் கூட...அன்று உனை எதற்க்காக நான்அழைத்தேன் என் எண்ணிப்பார்க்க முடிவிலே புலப்பட்டதுநன்றி சொல்லத் தான் என..இன்னும் சொல்லவில்லை அன்னன்றியைஉன்னிடம் நான்....உனைப் பற்றி நீயும் கூற‌எனைப் பற்றி நானும் கூற‌நகர்ந்தன நாட்களும் நம் நட்பைப் பற்றிக் கூறிக்கொண்டே.....பலவற்றில் பல திசைகளில்பயணம் செய்யும் நாமும் கூட‌பயணிக்கின்றோம் ஒரே திசையில்நட்பெனும் பாதையிலே...

Labels:


நன்மை தரும் 7 விசயங்கள்

1) ஏழ்மையிலும் நேர்மை

2) கோபத்திலும் பொறுமை

3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி

4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்

5) துன்பத்திலும் துணிவு

6) செல்வத்திலும் எளிமை

7) பதவியிலும் பணிவு..

Labels:

ஒவ்வொருவருக்கும் கை நிறையசம்பாதிக்க வேண்டும் என்று ஆசை தான் உள்ளதே தவிர மனம் நிறைய வாழ வேண்டும் என்று நினைப்போர் அரிது,

Labels:


சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்- பாரதிதாசன்

Labels:


என்னை பற்றி வதந்தி பரப்புபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவதூறு சொல்லும் போது தான், நான் என்னை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்கிறேன். என் முழு திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சொல்வது தவறு என்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறேன்"

Labels:


உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..........

Labels:

IJANGAL:OUR SERVICES TO BE:=> To Do Service to the needy people. => Providing proper education support.=> Caring the mentally retareded peoples.=> Caring the blind people=> Caring the people affected by AIDS=> Caring old age people=> Providing awareness to the people

Labels:

உலக அளவில் தமிழ் அனைத்து நிலைகளிலும் வாழ்ந்து ,வளர்ந்து,வென்றிட; தமிழினம் தலைநிமிர உழைப்போம்.சாதி வெறி சாய்ப்போம்! மதவெறி மாய்ப்போம்!மானுடம் காப்போம்!

Labels:


இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்குட்ட குட்ட நீ குனிந்தால்,உலகத்தில் குட்டிகொண்டேதான் இருப்பான்,முரசு கொட்டி கேளடா உனது பகைவன் பிடரியில் குதிங்கால் பட ஓடிபறப்பான்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வெல்லமடா உயிர் உனக்கு புவிகாண வீறுகண்டு போரிடுடா தமிழர் உளமகிழ நீ களத்தில் மகனாய் உயிரையும் தூக்கி கொடடாஇருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்வஞ்சினம் முழங்கி எழடா மானத்தின் வல்லமை உன் பகை உடைக்கும்அடநெஞ்சினில் தமிழ் வீரம் கொண்டு நில்லடாநிமிர்ந்த வரலாறு கிடைக்கும்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்இருந்தது போதும் இதுவரை செருப்பாய்இருப்பாய் தமிழா நெருப்பாய்

Labels:

உழைப்பை திருடியவன்
சமூகத்தின் உழைப்பை திருடியவன் முதல் குற்றவாளி, அதனை வேடிக்கை பார்த்து அனுமதித்து கொண்டு இருப்பவன் இரண்டாவது குற்றவாளி. இப்படியே விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறோமே எப்படி உருப்படும் தேசமும், மக்களும்.. அதனால களத்தில் இறங்கி போராடாம வேறு வழியில்ல.. மாற்ற வேண்டும், இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்கான அமைப்புகளோடு இணையாம திண்ணை பேச்சு பேச வேண்டாம்

Labels:

மெய்படாத கனவுகள்கவலைகளை தந்தது. கவலைகள் அமைதியை கற்றுத்தந்தது. அமைதி கடவுளை காண்பித்தது.

Labels:

Saturday, November 20, 2010

ஆனந்தூர்

Labels:

இது எனது கிராமம் ஆனந்தூர் , ஆர் எஸ் மங்களம் ராமநாதபுரம்

Labels:

Thursday, November 26, 2009

======================

பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ?

இனி என்னை புதிய உயிராக்கி
மதி தன்னை மிக தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய்....

- பாரதியார்
=========================

தோல்வியை காதலிப்பவன்..... அதிஷ்ட்டத்திற்க்கு அர்த்தம் தெரியாதவன்.... நானே... எனது... நல்ல நண்பன்...

"Try not to become a man of success but rather try to become a man of value" - Albert Einstein

"Fear Not. What is not real, never was and never will be. What is real, always was and cannot be destroyed." - bhagavath geethai

"மற்றவர்களுக்கு மண்டியிட்டு வாழ்வதை விட நான் நிமிர்ந்து நின்றே சாவேன்" - சே குவேரா

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே.....!! - சே குவேரா

“If you tremble indignation at every injustice then you are a comrade of mine.” - Che Guevara

இறைவன் மனிதனுக்குச் சொன்னது "கீதை"
மனிதன் இறைவனுக்குச் சொன்னது "திருவாசகம்"
மனிதன் மனிதனுக்குச் சொன்னது "திருக்குறள்"


=================
======

"எவர் தடுப்பினும் விடியல் பிறக்கும்"
"எவர் மறைப்பினும் கதிரவன் உதிக்கும்"
"விடியலின் கதிரில் பனி போல் ஒழிவர் எம் எதிரிகள்"

Labels:

காதலில் விழுந்த கவிதை

விழிமலர உன் இதழ் விரிய சிந்திய சிரிப்பால்
வழித்தேடி என் மனம் நிறைந்ததே! பூரிப்பால்
முகம்மலர உனைநோக்கினனோ! அன்பால்
அகம்மகிழ உருக்குதென்னை காதல் பிறப்பால்

விண்ணிருக்கும் நிலவும் நீ என்பேனே!
கண்ணிருக்கும் பார்வையும் நீ என்பேனே!
கள்ளிருக்கும் இதழும் நீ என்பேனே!
உள்ளிருக்கும் உயிரே நீ என்பேனே...

விழிக்கூறும் உன் மௌன மொழிகூட தருதே சுவை
எழில்தரும் உன் நளினமும் தாங்குதே! காதலின் தேவை
எனை மீட்டும் உன் பெயரிலும் ஒரு அழகிய இசை
உனைத்தாங்கும் வரைதான்.. என் இதயம் துடித்திடவே ஆசை

மழையென நனைத்தாய் உயிர்வரை அன்பாய்
தழைத்தோங்கும் செடியென வாழும்வகை மாற்றினாய்
நினைத்தேங்கும் காதல் உள் நிரப்பி வைத்தாய்
அணைத்தேங்கும் நீராய் ஆசைகள் பூட்டி வைத்தாய்..

உறவென நீ வர எதிர்ப்பார்க்கும் என் நெஞ்சம்
சிறகெனவே பறக்கும் எனதாசைகள் உன்னிடமே தஞ்சம்
சிறு பிள்ளை ஆவேனே உன்னோடு நான் மஞ்சம்
திருநாளை வரவேற்க என் நாட்களும் கெஞ்சும்

இனிய மொழிப்பேச்சும் விழிவீச்சும் உன்னிடத்திலே
இனிக்கும் தருணங்கள் இனிவசமாகட்டும் என்னிடத்திலே
இனியவளே இனி என் வாழ்க்கை உன்னிடத்திலே
இனி உரைக்க என்ன உண்டு என்னிடத்திலே...

Labels:

உங்கள் எதிர்காலம்

சோகம் வரும்போது, சோர்ந்து விடாதே...
கவலை வரும்போது கண்ணீர் விடாதே...
கஷ்டம் வரும்போது கலங்கி விடாதே...
மரத்தில் உள்ள இலைகள் கீழே உதிர்வது வீழ்வதற்காக அல்ல, எழுவதற்காகவே
தோல்வியை உரமாக்கி, வெற்றியை உருவாக்கு ...

Labels:

Thursday, October 22, 2009

"தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடி துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்து - நரை

எய்தி - கொடுங்

கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

போலே - நான்

"பூஜைக்குச் செல்வது குறித்த பெருமிதமோ, சுடுகாட்டுப் பாதைகளில் இறைந்து கிடக்கும் வருத்தமோ பூக்களுக்கு இல்லை!!"

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்."
"நீ எதை அகத்தால் பார்க்கிறாயோ.அதுவே புறமாக பரிணமிக்கிறது."
"உன் மனத்தின் உயரமே. உன் வாழ்க்கையின் உயரம்."

"இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என்று எதுவுமே இல்லை.. சகித்துக் கொள்ள முடியாத அசீங்கங்களே எல்லாம்!!"

எல்லாம் மாயை....எல்லாம் சாயல் .... பொங்கிவரும் அன்பும், போற்றி தொழும் தெய்வமும... அஹம் சகலம் , புறம் சமம் ....

ஆணுக்கு பெண் எப்போதுமே அதிசயம்தான்...

அடைய முடியா பொருளின் மீது ஆசை தீராது, அபிமானம் மாறாது!!

இதயம் தளராத வரை இழப்புகள் பெரிதல்ல....!!!

Labels:

Saturday, October 10, 2009

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா
--------------------------------
--------------------------------------------
நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ
------------------------------------
----------------------------------------
பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின்
----------------------------------
----------------------------------------
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர்
----------------------------
----------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
----------------------------------
----------------------------------------
ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை
- தந்தை பெரியார்
--------------------------------
-----------------------------------------
தோல்வியிலிருந்து நாம் தவறுகளை திருத்திகொண்டால் தோல்வியும் வெற்றிதான் -
மல்கொல்ம் போர்ப்ஸ்
--------------------------------
------------------------------------
போரி
ன் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்! - வைரமுத்து

Labels:

Wednesday, September 09, 2009

யார் நீ..?!




நண்பர்காள்..

உணர்ச்சிவசப்படுவது
ஆரோக்கியமல்ல...!

இது,
சிரிப்பவர் உலகம்..
உன் கண்கள் மட்டும்
ஒழுகுவதேன்..?

இது,
இருப்பவர் உலகம்..
திருவோட்டை
நீ இன்னும்
தழுவுவதேன்..?

நண்பா..
முட்டைக்குள்
கருவை வைத்தான்..
கருவுக்கு..
காற்றும் வைத்தான்..

ஆனால் உனக்கு..
ஆறாம்
அறிவை வைத்தான்..!

***

உனக்கென்ன..

சிறு பிராயம்
விளையாட மட்டும் தானா..?

இளமை..
காதல் கேளிக்கைக்கு
அர்ப்பணமா..?

முதுமை என்ன
சம்சார வாழ்க்கைக்கும்
சாரயத்திற்கும்
தர்ப்பணமா..??

நண்பா..

வாடிக்கொண்டிருப்பது
உன் வாழ்க்கைச் 'செடி'..
உரமிட ஊரை அழைப்பது
மடமையடா..!

கீழே..
விழுந்துவிட்ட
வைரத்தை தேடும்போழ்துதான்..
அதன்
விலை மதிப்பே புரியும்
மனிதனுக்கு..!!!

***
உன்னைச் சுற்றிப் பார்..

நீராவதில்
நீருக்குச் சிரமமில்லை..
அது நீரின் தர்மம்..

நெருப்பாவதில்
நெருப்புக்கும் சிரமமில்லை..
அது நெருப்பின் தர்மம்..!

வீசுவதில்
காற்றுக்குச் சிரமமில்லை
சுற்றுவதில்
பூமிக்கும் சிரமமில்லை..!

ஆனால் மனிதா..

மனிதனாவதில் மட்டும்..
உனக்கு
ஏன் இவ்வளவு சிரமம்..???!!!

Labels:

இதயத்தில் ஊடுருவிய வாள்



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

Labels:

பூக்குமா வசந்தம்…


கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்




Labels:


தட்டி எழுப்பு
காற்றை தட்டி எழுப்பினால் புயல்,
மழையை தட்டி எழுப்பினால் வெள்ளம்,
சூரியனை தட்டி எழுப்பினால் வெப்பம்,
மரத்தை தட்டி எழுப்பினால் காற்று.........

உயிரை தட்டி எழுப்பினால் பிணம்,
கோபத்தை தட்டி எழுப்பினால் இரத்தம்,
முகத்தை தட்டி எழுப்பினால் பார்வை,
கண்களை தட்டி எழுப்பினால் காதல்,

காதலை தட்டி எழுப்பினால் ஆசை,
மின்சாரத்தை தட்டி எழுப்பினால் வெளிச்சம்,
என்னை தட்டி எழுப்பினால் உதவி
நட்பை தட்டி எழுப்பினால் அன்பு.



Labels:

பிறவி!


* பொருத்தம் பார்த்துதான்
மண முடித்தோம்
பெரியோர் ஆசியுடன்...

* வருத்தமாகவே
பேசிக் கொள்கிறோம்
நம் மனதுக்குள்
என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானும்...

* விருந்தினர் முன் மட்டும்
மகிழ்ச்சியாய்
முகம் காட்டுகிறோம்

* மவுனம் கலையும்
காலங்களில் நாம்
பேசிக் கொள்வது பரஸ்பரக்
குற்றச்சாட்டுகளாகவே
நிறைவடைகிறது...

* மறுபிறவி பற்றி
எனக்குப் பயமில்லை
நம்பிக்கையில்லை... எனினும்
பயப்பட வைக்கிறது
நீ வைக்கும்
நோன்பும், விரதங்களும்...

Labels:

நட்பு ....

முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..

அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..

பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..

கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்......!!

Labels:

காதலின் அவஸ்தை

இன்றாவது என் காதலை
சொல்லி விடலாமென்று
ஓடோடி வருகிறேன்.

நீ..
எப்பொழுதும் நிற்கும்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
இன்று நிற்கவில்லை.

என்ன செய்வதென்று புரியாமல்
ஒரு ஆட்டோ பிடித்து
அடுத்த நிறுத்தத்திற்கு
நான் வருவதற்குள்..

வழியிலேயே நீ
நான் வந்த ஆட்டோவை
நிறுத்தி ஏறுகிறாய்!

என்னருகில்
வந்தமர்ந்து கொள்கிறாய்!

ஒரு சின்ன 'ஹாய்'
சொல்லி கொள்கிறோம்.

அடுத்த சில நிமிடங்கள்
மௌனமாய்
கடந்துகொண்டிருக்க..

உன் தலைமுடியில்
ஒன்றிரண்டு பறந்துவந்து
என்முகத்தில் படுகிறது.

அதையெடுத்து
உன் -
காதுமடல்களில் சொருகிக் கொண்டு
என்னைப் பார்க்கிறாய்..

அதற்குள்
ஆட்டோ ஒரு பள்ளத்தில்
ஏறி இறங்க,
நீயும் நானும் கொஞ்சம் குலுங்கி
நேரே அமர்வதற்குள் -

உன் தாவணி
காற்றோடு பறந்து வந்து
என் முகத்தை மூடிக்கொள்கிறது!

நீ
ஆவேசமாக அதை எடுத்து
உன் இடுப்பில் சுற்றிக்கொள்கிறாய்.

திரும்பி
ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.

பார்த்துவிட்டு
தலைகுனிந்துகொண்டே
லேசாக புன்முறுவல் செய்கிறாய்.

ஆட்டோ இங்குமங்கும் அசைந்து ஆடி
வேகமாகப் போகிறது.

அந்த அசைவுகளால்
உன் உடம்பும் என் உடம்பும்
அவ்வப்போது உரசிக்கொள்கிறது.
உன் மனசும் என் மனசும்
ஒன்றோடோன்று ஒட்டிக்கொள்கிறது.

நீ திரும்பி என்னை
நேராகப் பார்க்கிறாய்..

நானும் பார்க்கிறேன்;

நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய்..
நானும் சிரிக்கிறேன்;

ஏதோ கேட்கிறாய்..
நானும் பதில் சொல்கிறேன்;

மீண்டும் எதோ கேட்கிறாய்
மீண்டும் நான் பதில் சொல்கிறேன்;

அப்படியே..நேரம் கடக்க.. கடக்க
தூரம் கடக்க.. கடக்க
நீயும் நானும்
நிறைய கேட்கிறோம்;
நிறைய பேசுகிறோம்;

நம் காதலைத் தவிர!!

Labels:

ரிங்க் டோன் - காதல் கவிதை

ரிங்க் டோன்

க்ரீங்.. க்ரீங்..
அன்பே.. உன் வீட்டில்
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,

தொடர்பு துண்டிக்கப் பட்டது!

மீண்டும் -
க்ரீங்.. க்ரீங்..
தொலைபேசி மணியடித்தது,
ஓடிச்சென்று நீ
எடுத்தாய்,

தொடர்பு துண்டிக்கப் பட்டது!

உன் வீட்டில் -
இருப்பவர்களெல்லாம்
திட்டினார்கள்,
எந்த கருங்காளினு தெரியலையே(?)

ஆனால்..
உனக்குத் தெரியும் -

நான் தானந்தக் கருங்காளியென்று!

Labels: